Monday, May 28, 2012
Sunday, May 27, 2012
Saturday, May 26, 2012
Friday, May 25, 2012
3வது போட்டி..
3வது போட்டி வத்திராயன் உதய சூரியன் அணியினருக்கும் மருதங்கேணி கணேசானந்தா அணியினருக்கும் இடம்பெற்றது. நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்து பத்து பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 97 ஓட்டங்களை 7 விக்கெட் இழப்பிற்கு பெற்றது உதய சூரியன் அணி. இதில் அதிகூடிய ஓட்டங்களாக 25 (21 பந்தில்) பெறப்பட்டது. அதிக விக்கெட்டாக 24 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தப்பட்டது.
பதிலுக்கு துடுப்பாடிய கணேசானந்தா அணி விளையாட்டு அணி 9.2 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இரண்டாவது போட்டி....
இரண்டாவது போட்டி அம்பன் பிங்பொங் அணியினருக்கும் குடத்தனை செல்வா விளையாட்டு அணியினருக்கும் இடம்பெற்றது. நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்து பத்து பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 84 ஓட்டங்களை 4 விக்கெட் இழப்பிற்கு பெற்றது பிங்பொங் அணி. இதில் 51 அதிகூடிய ஓட்டங்களை சயந்தன் அவா்கள் (26 பந்துகளில்) பெற்றார். . இதில் செல்வா விளையாட்டு கழகம் சார்பாக முரளி 20 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பாடிய செல்வா விளையாட்டு அணி 86 ஓட்டங்களை 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றிபெற்றது. இதில் 33( 21 பந்தில்) அதிகூடிய ஓட்டங்களை முரளி பெற்றார். அம்பன் பிங்பொங் அணி சார்பாக 20 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
>
முதலாவது மென்பந்து சுற்றுப்போட்டி......
முதலாவது சுற்றுப்போட்டி
வேம்படி ஓடுமீன் வி.கழகத்துக்கும் சக்திவேல் வி.கழகத்துக்கும் இடம்பெற்றது. நாணயச்
சுளற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்து பத்து பந்துப்பரிமாற்றங்களின்
முடிவில் 67 ஓட்டங்களை 3 விக்கெட் இழப்பிற்கு
பெற்றது ஓடுமீன் அணி. பதிலுக்கு துடுப்பாடிய சக்திவேல் அணி 8.5 ஓவரில் 68 ஓட்டங்களைப்பெற்று
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் லவுலி ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப்
பெற்றார்.
>
ஆழியவளை அருணோதயா வி.கழகத்தால் நடாத்தப்பட்ட முதல் நாள்மென்பந்துச்சுற்றுப்போட்டி.(25.05.2012.)
ஆழியவளை அருணோதயா வி.கழகத்தால் நடாத்தப்பட்டுக்கொண்டுடிருக்கும் மென்பந்துச்சுற்றுப்போட்டியின் ஆரம்ப நாளான இன்று நடைபெற்ற நிகள்வுகள் முதலாவதாக மங்கள விளக்கினை யா/ஆழியவளை சீ.சீ.த.கவித்தியாலய அதிபர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆழியவளையின்கிராம சேவகரும் ஏற்றிவைத்தார்கள் அதனைத் தொடர்ந்து இலங்கை தேசியக்கொடியை இராணுவ லெப்டினன்ட் சனத் மற்றும் கழகக் கொடியை நிர்வாக செயலாளர் பாபு அவர்களும் ஏற்றினர். பின் அகவணக்கம் வரவேற்புரையடன் நிகள்வுகள் ஆரம்பமாயின.
>
>
Wednesday, May 23, 2012
ஆழியவளை அருணோதயா வி.கழகத்தினால் நடாத்தப்படவுள்ள மருதங்கேணி பிரதேசத்திற்குஉட்பட்ட வி.கழகங்களுக்கு இடையிலான மென்பந்துச்சுற்றப்போட்டி மற்றும் உதைபந்தாட்டசுற்றுப்போட்டிகள் 25.05.2012 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆகவே போட்டிகள் தொடர்பான முடிவு விபரங்களை உடனுக்குடன் இதே இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்பதனை அறியத்தருகிறோம்.>
Thursday, May 17, 2012
வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் - புரூஸ் லீ
Subscribe to:
Posts (Atom)