10 வதுபோட்டி தாளையடி
சென்அன்ரனிஸ் அணியினருக்கும் நாகர்கோவில் வெண்மதி அணியினருக்கும் இடம்பெற்றது. இதன்படி நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று சென்அன்ரனிஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தனர். முதலில்நாகர்கோவில் வெண்மதி அணி 10 பந்துப்பரிமாற்றங்களின்
முடிவில் 4 விக்கெட்டைமாத்திரம் இழந்து 108 ஓட்டங்களை
பெற்றுக்கொண்டது. வெண்மதி அணி சார்பாக நிதர்சன் 15 பந்துகளை எதிர்கொண்டு 27 ஓட்டங்களைப்
பெற்றார். ( இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 108 ஓட்டங்களே அதிகூடியஓட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது
). பந்துவீச்சில் தாளையடி
சென்அன்ரனிஸ் அணிசார்பாக டினேஸ் 2 ஓவர்கள் பந்துவீசி 14 ஓட்டங்களை
கொடுத்து 1 விக்கெட்டை
கைப்பற்றினார்.
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய தாளையடி சென்அன்ரனிஸ்
அணி 4.4 ஓவர்களில் அனைத்து
விக்கெட்டுக்களையும் இழந்து 22 ஓட்டங்களைப் பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியைத்தளுவியது.
தாளையடி சென்அன்ரனிஸ் அணிசார்பாக உமாகரன் 7 பந்துகளில் 9 ஓட்டங்களைப்பெற்றார். நாகர்கோவில்
வெண்மதிஅணி சார்பாக பந்துவீச்சில் சதீஸ்
2 ஓவர்கள் பந்துவீசி 4 ஓட்டங்களை
கொடுத்து 3 விக்கெட்டை
கைப்பற்றினார்.
No comments:
Post a Comment