7 வது போட்டி சத்திவேல் அணியினருக்கும் உடுத்துறை பாரதி அணியினருக்கும் இடம்பெற்றது. . நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று சத்திவேல் அணி களத்தடுப்பை தெரிவு செய்தனர். . இதன்படி முதலில் பாரதி அணி 10 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 5 விக்கெட் டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாரதி அணி சார்பாக ஜெயதிலீபன் 20 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களைப் பெற்றார். சத்திவேல் அணிசார்பாக அஜித் 3 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சத்திவேல் அணி 10 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத்தழுவியது. இதில் சத்திவேல் அணி சார்பாக பிரியந்தன் 12 பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் துசாந் 2 ஒவர்கள் பந்துவீசி 13 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
No comments:
Post a Comment