12வது இறுதிப்போட்டி
உடுத்துறை பாரதி அணியினருக்கும் நாகர்கோவில் வெண்மதி அணியினருக்கும்
இடம்பெற்றது. இதன்படி நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று உடுத்துறை
பாரதிஅணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். முதலில் உடுத்துறை பாரதி அணி அணி 9.5 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் அனைத்துவிக்கெட்டினையும்
இழந்து 53 ஓட்டங்களை
பெற்றுக்கொண்டது. . இதில் உடுத்துறை பாரதி அணிசார்பாக ஜெயதீப் 12 பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களைப்
பெற்றார். நாகர்கோவில் வெண்மதிஅணி சார்பாக பந்துவீச்சில்
கோகுலதாசன் 3 ஓவர்கள் பந்துவீசி
17 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய நாகர்கோவில்
வெண்மதி அணி 6.3 பந்துப்பரிமாற்றங்களின்
முடிவில் 3 விக்கெட்டைமாத்திரம் இழந்து 54 ஓட்டங்களைப்
பெற்று 7 விக்கெடட்டுகளால் வெற்றிபெற்றது. நாகர்கோவில் வெண்மதி அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்டளாராக களமிறங்கிய
நிதர்சன் அவர்கள் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 16 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களைப்பெற்று
அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பந்து வீச்சில் உடுத்துறை பாரதி அணிசார்பாக கஜீதரன் 1.3 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களைக்கொடுத்து
2 விக்கெட்டைக் கைப்பற்றினார். அருணேதயா வி.கழகத்தால் முதல் முறையாக
நடாத்தப்பட்ட மாபெரும் விளையாடடுப்போட்டியின் மென்பந்து துடுப்பாட்ட வெற்றிக்கிண்ணத்தை
சுவீகரித்த முதலாவது அணி என்கிற பெருமையை நாகர்கோவில் வெண்மதி வி.கழக
அணி பெற்று சாதனை படைத்தது.
No comments:
Post a Comment