... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, May 27, 2012

11வது போட்டி...












11வது போட்டி உடுத்துறை பாரதி அணியினருக்கும் உடுத்துறைசெந்தமிழ் அணியினருக்கும் இடம்பெற்றது. இதன்படி நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று  உடுத்துறைசெந்தமிழ் அணி  களத்தடுப்பை தெரிவு செய்தனர். முதலில் உடுத்துறை பாரதி அணி அணி  10  பந்துப்பரிமாற்றங்களின் முடிவில்  7 விக்கெட்டைமாத்திரம்  இழந்து    69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் உடுத்துறை பாரதி அணிசார்பாக  ஜெயதிலீபன் 19 பந்துகளை எதிர்கொண்டு  17 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில உடுத்துறைசெந்தமிழ்   அணிசார்பாக  தர்சன்  3  ஓவர்கள் பந்துவீசி  21  ஓட்டங்களை கொடுத்து  3  விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   உடுத்துறைசெந்தமிழ் அணி 9.2 ஓவர்களில்     அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து  61  ஓட்டங்களைப் பெற்று   8  ஓட்டங்களால் தோல்வியைத்தளுவியது. உடுத்துறைசெந்தமிழ் அணிசார்பாக பகீ 10 பந்துகளை எதிர் கொண்டு 10  ஓட்டங்களைப் பெற்றார். உடுத்துறை பாரதி அணிசார்பாக பந்துவீச்சில் ஜெயதிலீபன்   2.2 ஓவர்கள் பந்துவீசி  9 ஓட்டங்களை கொடுத்து   3  விக்கெட்டை கைப்பற்றினார்.
>

No comments:

Post a Comment